top of page

நல்வரவு

அடிப்படை உளசமூகத் திறன்கள் பயிற்சி

அடிப்படை உளசமூகத் திறன்கள் பற்றிய இந்த குறுகிய பாடநெறி,  COVID-19 முன்னெச்சரிக்கைப் பணியாளர்களான உங்களையும், உங்கள் பயனாளிகளையும் பராமரித்துக் கொள்ள உதவும். இந்த பாடநெறி பின்வரும் ஐந்து செயற்கூறுகளைக் கொண்டுள்ளது 1) உங்கள் நலன் 2) நாளாந்த இடையீடுகளில் ஆதரவளிக்கும் தொடர்பாடல் 3) நடைமுறைச் சாத்தியமான உதவியை வழங்குதல் 4) மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் மற்றும் 5) குறிப்பான விசேட நிலைமைகளில் உதவுதல்.  இந்த பாடநெறி முதன்மையாக COVID-19 முன்னெச்சரிக்கைப் பணியாளர்களுக்கு உதவி வழங்க வடிவமைக்கப்பட்டாலும் இந்த திறன்கள் ஏனைய நெருக்கடி சூழ்நிலைகளிழும் பதிலிறுப்புப் பணியாளர்களினால் பயன்படுத்தபடலாம்.

Screenshot 2020-09-11 at 14.02.11.png

இந்த பாடத்திட்டத்தை நான் எப்படி எடுத்துக்கொள்வது?

tamil walkthrough.png

தொகுதி விளக்கங்கள்

உங்கள் நலன்

செயற்கூறு 1

உங்கள் நலனைப் பேணும் அதே வேளையில் வேறொருவருக்கு உதவுவதற்கான முக்கிய விளக்கவுரைகளுக்கு ஒரு அடிப்படை அறிமுகத்தை இந்தத் தொகுதி உங்களுக்கு வழங்கும்.

ஆதரவளிக்கும் தொடர்பாடல் 

செயற்கூறு  2

இந்த தொகுதி ஆதரவளிக்கும் தொடர்பாடலை ஆராயும்இ இவை நெருக்கடி சூழ்நிலைகள் மற்றும் அன்றாட தொடர்புகளில் மற்றவர்களுடன் இணைப்பை ஏற்படுத்த முக்கியமானது.

நடைமுறைச் சாத்தியமான உதவியை வழங்குதல்

செயற்கூறு 3

அடிப்படை உளவியல் சமூகத் திறன்களில் நடைமுறைச் சாத்தியமான உதவியை வழங்குதல் ஒரு முக்கிய அங்கமாகும்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்

செயற்கூறு 4

வெவ்வேறு நபர்கள் ஒரே நிலைமைகளுக்கு வெவ்வேறு எதிர் விளைவைக் கொண்டுள்ளனர். மன அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்களுக்கு உதவுவதல் பல கூறுகளைக் கொண்டுள்ளது.

விசேட நிலைமைகள்

செயற்கூறு 5

சமூகத்தில் உள்ள நபர்களுக்கு உதவும் போது எப்போதுமே நீங்கள் கவனிக்க வேண்டிய விசேட சூழ்நிலைகள் உள்ளன.

பிற சேவைகள்

நெருக்கடி காலங்களில் மக்களுக்கு உதவ நாம் பெரும்பாலும்  பிற சேவை வழங்குநர்களுடன் இணைக்க வேண்டும். பொருத்தமான சேவைகளை அடைவது என்பது நீங்கள் உதவி செய்யும் நபர்கள் அல்லது உங்களுக்கு தேவையான ஆதரவை அணுகுவதை உறுதி செய்வதற்கான முக்கியமான படியாகும்

ஒப்புரை

இந்த பாடநெறி Lotus Circle இன் உதவியுடன் The Asia Foundation மற்றும் The Good Practice Group இனரால் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கம் Inter-Agency Standing Committee வெளியீடான “அடிப்படை உளவியல் சமூகத்திறன்கள்: COVID-19 பணியில் ஈடுபடுபவர்களுக்கான ஒரு வழிகாட்டி”இலிருந்து மாற்றப்பட்டுள்ளது. பாட உள்ளடக்கங்களின் தழுவல் மற்றும் வடிவமைப்பு திவ்யா கந்தையா, சப்ரீனா காதர், நிலுஷ்கா பெரேரா, குசல வெட்டிசிங்க மற்றும் ஆனந்த கலபாட்டியால் மேற்கொள்ளப்பட்டது. இந்த தழுவலை தமிழ் மொழியில் சாயிசனாதனி ஸ்ரீதரன் மற்றும் திவ்யா கந்தையா ஆகியோரும் சிங்கள மொழியில் உவசர ஆரம்பவெல மற்றும் ஹஸ்னா பாயிஸ் ஆகியோரும் மொழிபெயர்த்துள்ளனர். தொகுதி காணொளிகளை திவ்யா கந்தையா, புண்ணியமூர்த்தி nஐயதீபா, ஆலோக வீரசேகர மற்றும் ஆனந்த கலபாட்டி ஆகியோர் விபரித்தனர்.   

Inter-Agency Standing Committee (IASC) இந்த மொழிபெயர்ப்பு / தழுவலை உருவாக்கவில்லை. இந்த மொழிபெயர்பின் உள்ளடக்கம் அல்லது துல்லியத்திற்கு IASC பொறுப்பல்ல. இந்த தழுவலில் கூடுதலான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 2020இல் வெளியிட்ட அசல் ஆங்கில பதிப்பு “Inter-Agency Standing Committee. Basic Psychosocial Skills: A Guide for COVID-19 Responders” பிணைப்பு மற்றும் உண்மையான பதிப்பாக இருக்கும்: 


இந்த மொழிபெயர்ப்பு / தழுவல் மூல வெளியீட்டின் அதே உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது: CC BY-NC-SA 3.0 IGO (https://creativecommons.org/licenses/by-nc-sa/3.0/) 

bottom of page